Monday, December 27, 2010

உளறல்

மீதமிருந்த
உளறல்களையும்
கொட்டித் தீர்த்து விட்டேன்..
மௌனம் கலையாமல்
மிதமாய்ப்
பார்க்கிறாய் நீ..

எனக்குள்

இன்னொரு உளறலின்
அறிகுறி!!

Wednesday, December 22, 2010

தஞ்சம்

ஒரு சாயங்கால
வேனிற்காற்றில்
மரம் உதிர்த்த இலைகள்
ஒட்டிக்கொண்டன
உன் துப்பட்டாவுடன்..

எல்லாவற்றுக்கும்தான்
அடைக்கலமாகிப்
போகிறாய் நீ..!

Monday, December 20, 2010

காதற்பொழிவு

ஒரு நீண்ட
பனிப்பொழிவின் இடையில்
நெருப்பு மூட்டிய
கதகதப்புடன்
அணைத்துக் கொள்கிறது
உன் காதல்...

அவசரம் ஏதுமின்றி
மெதுவாய் உதிர்கின்றன
பனித்துளிகள்..
நம் காதலின் அழகை
ரசித்தபடி...

Friday, December 10, 2010

பசி

உன்
இதழ்களை உண்டு
பசியாறுகிறது
என் காதல்...

நம்
காதலை உண்டு
இன்னும் பசியாகிறது
என் உதடுகள்..

Wednesday, June 23, 2010

வெளிச்சம்

இரவான போதும்
இருள் மூடவில்லை
என் விண்ணை...
உன்
காதலின் வெளிச்சத்தில்
விளையாடுகின்றன
என் கனவுகள்..

Saturday, May 22, 2010

அர்த்தம்

உறக்கத்தில்
நீ உதிர்க்கும்
புன்னகையில்
அர்த்தம் பெறுகிறது
என் காதல்...

Monday, May 10, 2010

பார்வை


எத்தனை கூட்டத்திலும்
என் மேல்
தனிமையை
எறிகிறது
உன் பார்வை...
ஒரு விழி
கவிதையும்..
மறு விழி
கத்தியுமாய்...

Sunday, May 9, 2010

அழகு

அந்தி மயங்கியதும்
சாவதானமாய்
முகம் கழுவி
விளக்கேற்றினாய்..
பித்தேறித் திரிந்தேன்
நான்...
எரிந்தே போனது திரி...

Saturday, May 8, 2010

பிறிதொரு மோட்சம்

நான்
உறங்கையிலேயே 
நீ தரும்
முத்தங்களில்
மோட்சமடைகின்றன
என் கனவுகள்...

மோட்சம்


நான்
உறங்குவதாய் நினைத்து
நீ தரும்
முத்தங்களில்
மோட்சமடைகின்றன
என் இரவுகள்...

Tuesday, May 4, 2010

ஞாபகம்

தூக்கமற்ற நாட்களில்
என் தனிமையைச்
செதுக்குகிறது
உன் ஞாபகம்...
வலிகளை மௌனமாய்
அடைகாக்கிறது
இரவின் நிசப்தம்...

Monday, May 3, 2010

துயில்

உறங்கும்
உன் இமைகளில்
அமர்ந்திருக்கிறது
என் கனவு...

அவஸ்தை

சூறாவளியின்
மையத்தில் சுகமாய்
வசிக்கிறாய் நீ...
பரிதியில்
நான் படும்
அவஸ்தை புரியாமல்...

Sunday, May 2, 2010

விளைவு

மதம் பிடித்த
யானையாய்

அலைகிறது மனம்...
உன்னை ஏற்றிக்
கொண்டதிலிருந்து...

Monday, April 26, 2010

மௌனம்

இதில்தான் நீ தொடங்கினாய்!
இன்று வரை புரியவில்லை..
மௌனம் என்பது
பேசாமல் இருப்பதா,
பேசத் தவிப்பதா,
இல்லை
பேச்சடைத்து நிற்பதா?

Sunday, April 25, 2010

தாவணிப் பூ சிறகுகள்

நிலவு, பூ,
மேகம்,
என
எதைப் பற்றியும்
பேசும் கவிதைகள்
எதுவும் எனக்குச்
சொன்னதில்லை,
உன் தாவணிச் சிறகின்
தீண்டல்
இப்படி இருக்குமென...