Saturday, August 25, 2012

நானும் நானும்

எப்பொழுதும்
எதற்காகவோ
அலைபாயும் மனம்..
இரைச்சல் அடங்கியதும்
மௌனம்!
மௌனம் தொடங்கியதும்
வலி!
வலி அயர்ந்து போனால்
வெறுமை!
எப்போதேனும் அமைதி!
கொஞ்சம் சந்தோஷம்!

Thursday, August 23, 2012

புறக்கணிப்பு

தெரிந்தோ தெரியாமலோ..
என் ஒவ்வொரு நாளிலும்
நீ நிரப்பாத இடங்களை,
தனிமையும் வலியும்
நிரப்புகின்றன..
சமயங்களில்,
உன்னை விடவும்
தனிமையே
நெருங்கி நிற்கிறது..
என் கைகளை
விடாமல் பிடித்தபடி..

Saturday, June 2, 2012

மௌனப் பிதற்றல்

உன்
ஞாபகம் நிரம்பிய
உறக்கமற்ற
என் இரவுகள்
ஒரு
புதைந்து போன ரகசியம்..
நீயும் அறியாதவை..
 
ஊமையின் வலிகள்..

Monday, October 3, 2011

நெடியதொரு ஊடல்

நீ
உதிர்த்துப் போன
தனிமையில்
உதிர்ந்தே போனது
என் இரவு..

துளிர்த்திருந்த

கனவுகளும்
தூக்கு மாட்டிக் கொண்டன..