Tuesday, January 15, 2013

காதற்புனல்

என் விரலில்
காதலை
ஒட்டி வைத்தது
உன் கண்ணீர்..

Monday, October 22, 2012

காதற் குடிசை

உன் ஞாபகம்
கட்டுவதும்
உன் மௌனம்
இடிப்பதுமென..
பிழைப்புக்கும் சாவுக்குமாய்
மாறி மாறி
அலைகிறது என்
காதற் குடிசை..

இருளடர்ந்த
அதன் திண்ணையில்
குளிர் தாங்கி
இறந்து போனது
இன்னொரு
கனவுப் பூனை..

நேற்றைய மழையோடு
கொட்டிய
தனிமையின் விதைகள்
காடுகளாய் முளைக்கின்றன..

 தூரத்தை வெறிக்கும்
சாளரத்தின் வெளியே
பசியாய் அலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி..

இருக்கும் ஆசைகளை
எண்ணிப் புதைத்துவிட்டு
விடியலுக்குக் காத்திருக்கிறது
என் தூக்கம்.. 

கடைசியாய்
என் இரவுக்கு
எப்போது இரக்கம்
இருந்ததென
நினைவில்லை..

Saturday, August 25, 2012

தேவதைகள்


கற்பினைப் போல்
என்னைக் காக்கிறது
உன் காதல்!
என் பாதையில்
ஒளியேற்றுகிறது,
உன்
சந்தோஷப் புன்னகை!
தொலைந்து போன
என் ராகங்களைத்
தேடித் தருகிறது
உன்
மகத்தான மௌனம்!
உன்
கண்ணீரில் துடைக்கிறாய்
என் குற்றங்களை..
தேவதைகள் தேவதைகளே...

கவசம்

என் ஆசைகள்
மரிக்காமல்
காப்பதும்
உன் காதலே..