Tuesday, April 9, 2013

மௌனமயம்

உன் மௌனம் ஒன்றே
எனக்குப் பழக்கம்..
ரசனை
ஆறுதல்
காதல்
மோகம்
இன்னும் ஏதேதற்கோ
உன் மௌனத்தை
நான்
உண்டு முடித்தபின்..
இறுதியில்

உன் 
மௌனம் உண்டது
அனைத்தையும்..

Sunday, January 20, 2013

வேனில் மரம்

உன்
அன்பின் நிழலில்
முளைத்து வளர்ந்தது
என் காதல்..
பிரிவெனில் வேனிற்காலம்..
முறிவெனில் இலையுதிர் காலம்..
மற்றுமோர்
சுழற்சி வரை
காய்ந்தாலும் உதிர்ந்தாலும்..
வேர்களைக் காத்தே
நிற்கிறது
என் மரம்..

Tuesday, January 15, 2013

காதற்புனல்

என் விரலில்
காதலை
ஒட்டி வைத்தது
உன் கண்ணீர்..