Monday, October 3, 2011

நெடியதொரு ஊடல்

நீ
உதிர்த்துப் போன
தனிமையில்
உதிர்ந்தே போனது
என் இரவு..

துளிர்த்திருந்த

கனவுகளும்
தூக்கு மாட்டிக் கொண்டன..

Tuesday, May 10, 2011

காயம்

உன் 
மௌனத்தை உணர்ந்தே 
பழகி விட்டேன்..
உன்
பிரிவில்
இன்னும் அதிகமாய்..

Friday, April 22, 2011

தனிமை

நீ
எறிந்து போன
தனிமையில்
அத்தனையும்
சிதறிப் போனது..
என்னிடமிருந்த
உன்னைத் தவிர...

Wednesday, April 20, 2011

கைம்மை


நீ பிரிந்ததும்
நிலவைத் தொலைத்து
விதவையானது
என் வானம்...

Monday, April 18, 2011

பிரிவு


சாதலும்
சாதல் நிமித்தமும்..

ஊடற்பொழுது


இப்போதும் 
என் அறையில்
நீ உலவுகிறாய்..
புத்தகம் படிக்கிறாய்..
உறங்குகிறாய்..
குளித்துத்
தலை உலர்த்துகிறாய்..
என்னிடம் மட்டும்
பேசுவதில்லை..



Tuesday, April 5, 2011

முள்

இருள் போர்த்திய
நெருஞ்சிகளின் வழியில்..
நீங்காமல் நீள்கிறது
பயணம்...
பூர்த்தியற்ற வலிகள்
குழப்பங்கள்..
இடையில்
இன்னொரு முள்
உன் மௌனம்...

Monday, January 31, 2011

வெட்க நிழல்

நீ
உதிர்த்துச் சென்ற
வெட்கத்தின் நிழலில்
துளிர்க்கின்றன
என் ஆசைகள்..

Friday, January 28, 2011

வெற்றிடம்

என் காதல்
ஒரு வெற்றிடம்.
அதை நிரப்புவதெல்லாம்
உன்
மெல்லிய புன்னகையும்..
உன்
மகத்தான காதலும்..
கடவுள் போல்
உன் மௌனமும்...!

Thursday, January 6, 2011

நெடுனள்ளிரவு

இறவாத இரவுகளின்
அடர்வினுள்
ஏகாந்தக் குமிழ்களில்
மிதந்து கொண்டிருக்கும்
கனவுகள் எதற்கும்
தெரியவில்லை..
நான் இன்னும்
உறங்கவில்லை என...